மீண்டும் சினிமாவில் தேவயானி

Bookmark and Share

மீண்டும் சினிமாவில் தேவயானி

காதல் கோட்டைக்கு பிறகு பல வெற்றிக் கோட்டைகளை கட்டிய தேவயானி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

அவரின் அப்பாவித்தனமான குழந்தை முகம் எல்லோருக்கும் பிடிக்கும். 2004ம் ஆண்டுதான் அவர் பிசியாக நடித்த கடைசி ஆண்டு. அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். அங்கும் நம்பர் ஒண் நடிகையாக வலம் வந்தார்.

இடையில் சில படங்களில் நடித்தார். அவற்றில் சில வெளிவரவில்லை. தன் கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.

தற்போது தேவயானி மீண்டும் முழுமூச்சுடன் சினிமாவில் நடிக்க முடிவு செய்து விட்டார். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தில் ரஞ்சித்தின் மனைவியாக நடிக்கிறார்.

சமீபத்தில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். படத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமான கேரக்டராம். இதற்கு பிறகு கண்ணியமான அக்கா, அண்ணி கேரக்டரில், பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் கேரக்டரில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
நீண்ட இடைவேளைக்கு பிறகு டீச்சராக தேவயானி
அரைத்த மாவையே அரைக்க விரும்பாத தேவயானி!
உறவுகளுக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் தேவயானியின் கணவர்
டீச்சர் வேலைக்கு போகிறார் தேவயானி!
தென்னிந்திய நடிகைகளின் மறுபக்கம்
இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி
ஊருக்கு உபதேசம் அப்படி போகிறது தேவயானியின் அட்வைஸ்.
ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்த.. தேவயானி ஆத்துக்காரர்(சோலார் ஸ்டார்)!
எனக்கு எல்லாம் ஒன்றுதான், தேவயானி கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions