அரைத்த மாவையே அரைக்க விரும்பாத தேவயானி!

Bookmark and Share

அரைத்த மாவையே அரைக்க விரும்பாத தேவயானி!

கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை தேவயானி. அதையடுத்து, மஞ்சள் மகிமை, கொடி முல்லை, முத்தாரம் ஆகிய தொடர்களில் நடித்தார். இதில் முத்தாரம் தொடரில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்தார் தேவயானி. அந்த வகையில், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளுக்கு மத்தியில் தேவயானியும் சின்னத்திரையை கலக்கிக்கொண்டிருந்தார். அவருக்கென ஏராளமான நேயர்களும் இருந்தனர்.  இருப்பினும், பின்னர் அவரை எந்த சீரியல்களிலும் காண முடியவில்லை. ஆனால் அதன்பிறகு திருமதி தமிழ் படத்தில் நடித்த அவர், கடைசியாக விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார்.

இந்தநிலையில், அவ்வப்போது தேவயானிக்கு சீரியல் வாய்ப்புகளும் சென்றவண்ணம்தான் உள்ளதாம். ஆனால், அப்படி செல்லும் எல்லா சீரியல்களுமே ஏற்கனவே நடித்தது போன்றே உள்ளதாம். ஏற்கனவே நடித்தது போன்ற கதைகளில் மீண்டும மீண்டும் நடிப்பதில் ஆர்வம் இல்லாத தேவயானி அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறாராம். 

அதேசமயம், பெண்களுக்கு விழிப்புணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான வித்தியாசமான கதைகள் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து டிவித்தொடர்கள் பக்கம் வருவாராம் தேவயானி. இல்லையேல் மீண்டும் சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கி விடுவாராம்.


Post your comment





Related News
மாமியாராக மாறிய தேவயானி
நீண்ட இடைவேளைக்கு பிறகு டீச்சராக தேவயானி
உறவுகளுக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் தேவயானியின் கணவர்
மீண்டும் சினிமாவில் தேவயானி
டீச்சர் வேலைக்கு போகிறார் தேவயானி!
தென்னிந்திய நடிகைகளின் மறுபக்கம்
இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி
ஊருக்கு உபதேசம் அப்படி போகிறது தேவயானியின் அட்வைஸ்.
ஏ ஆர் ரஹ்மானை விமர்சித்த.. தேவயானி ஆத்துக்காரர்(சோலார் ஸ்டார்)!
எனக்கு எல்லாம் ஒன்றுதான், தேவயானி கருத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions