மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா

Bookmark and Share

மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான `தேவி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரபுதேவா, தேவி 2 படப்பிடிப்புக்காக கோவை சரளாவுடன் மொரீசியஸ் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தேவி படத்தின் தொடர்ச்சியா அல்லது முற்றிலும் மாறுபட்ட கதையா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. மேலும் படத்தில் தமன்னா நடிப்பதும் உறுதியாகவில்லை.

பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக `யங் மங் சங்', `சார்லி சாப்ளின்-2' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன. 

பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், தேள், ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் பிரபுதேவாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் பிரபுதேவா படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மாமியாராக மாறிய தேவயானி
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions