தேவி வெற்றிவிழாவில் கவிஞர் நா. முத்துக்குமார் மகனுக்கு கவுரவம்

Bookmark and Share

தேவி வெற்றிவிழாவில் கவிஞர் நா. முத்துக்குமார் மகனுக்கு கவுரவம்

பிரபு தேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா, ஐசரிகணேஷ் இணைந்து தயாரித்த படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், சோனுசூட் ஆகியோர் நடித்திருந்தனர். 

தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த படத்தின்அனைத்து பாடல்களையும் கவிஞர் நா. முத்துக்குமார்  எழுதிஇருந்தார். அவருக்கு வழங்க வேண்டிய கேடயத்தை நா. முத்துக்குமார் மகன் ஆதவன் மேடைக்கு வந்து பெற்றுக்கொண்டார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்கள். இது  அவருக்கு கவுரவம் அளிக்கும் நெகழ்ச்சியான தருணமாக இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பட வெற்றி விழாவில் கேடயம் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தென் இந்திய நடிகர்கள் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜீவா, விக்ரம் பிரபு, பரத், பார்த்திபன், டைரக்டர் ரவிக்குமார், நடிகைகள் மீனா, லிசி, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions