நா.முத்துக்குமார் மகனை கௌரவப்படுத்திய தேவி படக்குழு!

Bookmark and Share

நா.முத்துக்குமார் மகனை கௌரவப்படுத்திய தேவி படக்குழு!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியான ஹாரர் காமெடி படம் தேவி. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

அதற்கேற்றாற்போல் படமும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியது மட்டுமல்லாமல் கல்லாவையும் கட்டியது. இதனால் மிகுந்த உற்சாகமான பிரபுதேவா, இயக்குனர் விஜய்க்கு சமீபத்தில் விலையுயர்ந்த ஆடி கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இதுபோக இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது. இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதிய மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சார்பாக அவருடைய மகனுக்கு நினைவுக்கோப்பை அளிக்கப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions