திரையரங்கில் திரையிடப்படும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைப்பயணம்!

Bookmark and Share

திரையரங்கில் திரையிடப்படும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைப்பயணம்!

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாக இசையமைப்பதில் வித்தகர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. ஒவ்வோரு வருடமும் தனது இசையை வெளிநாடு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம் மேற்கொண்டு இசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

இந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginia ஆகிய 7 இடங்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இரு துறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றார்.

இவரது இசை அற்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை உலகில் முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடிய தொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபு தேவா, ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு திரையுலக முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

விரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுற்றுப்பயணம் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions