புலியை அடுத்து சிங்கத்திற்கு இசையமக்கும் தேவிஸ்ரீபிரசாத்!

Bookmark and Share

புலியை அடுத்து சிங்கத்திற்கு இசையமக்கும் தேவிஸ்ரீபிரசாத்!

பசங்க-2, 24 படங்களை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா சிங்கம்-3 ல் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 15ல் தொடங்குகிறது. 

அப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு, காரைக்குடி, ஆந்திராவிலும் பின்னர் ஆஸ்திரேலியா, பாரிஸ் போன்ற நாடுகளிலும் நடக்கவுள்ளது. சிங்கம்-3 யின் ஆரம்பகட்ட பணிகள் எப்போதோ முடிவடைந்து விட்டதால், படப்பிடிப்புக்கு செல்ல தயார்நிலையில் இருக்கும் ஹரி, தனது பிரதான ஒளிப்பதிவாளரான பிரியனுடன் வெளிநாடுகளுக்கு சென்று வித்தியாசமான லொகேசன்களுக்கு சென்று வந்துள்ளார்.

மேலும், பிரியனைப் பொறுத்தவரை தொடர்ந்து ஹரி இக்கும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருபவர், அவர் ஒரு படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த படப்பிடிப்பு தொடங்குவது வரை ஹரியுடனேயே பயணிக்கிறார். 

அப்போது அவருடன் கதையைப்பற்றிய விவாத்திலும் கலந்து கொள்கிறாராம் பிரியன். மேலும், இந்த சிங்கம்-3 படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால் ஏற்கனவே சிங்கம், சிங்கம்-2 படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்தே இந்த படத்திற்கும் இசையமைப்பதாக தெரிகிறது. எனவே விஜய்யின் புலியைத் தொடர்ந்து சூர்யாவின் சிங்கம்-3 க்கான சூப்பர் ஹிட் டியூன்களை தற்போது ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் தேவிஸ்ரீபிரசாத்.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions