மாண்டலின் ஸ்ரீனிவாசன்தான் எனது குரு! - இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

Bookmark and Share

மாண்டலின் ஸ்ரீனிவாசன்தான் எனது குரு! - இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

தமிழில் சச்சின், மன்மதன் அம்பு உள்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். இவர் தற்போது ஆந்திராவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார்.

இவர் இசையில் இந்த அளவுக்கு பிரபலமாவதற்கு காரணம் மறைந்த மாண்டலின் இசைகலைஞர் ஸ்ரீனிவாசன்தானாம். அதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், நான் இசையை மாண்டலின் ஸ்ரீனிவாசனிடம் தான் கற்றுக்கொண்டேன்.

எனக்கு அவர் குரு மட்டுமின்றி ஒரு நல்ல அண்ணனாகவும் இருந்து இசையை முறைப்படி கற்றுக்கொடுத்தார். அவர் எனக்கு சொல்லிக்கொடுத்ததைத்தான் இப்போது வரை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

அவரை எல்லோருக்குமே மாண்டலின் கலைஞராக மட்டும்தான் தெரியும். ஆனால், அவர் கித்தார், வீணையெல்லாம் வாசிப்பார். அதை நிறைய பேருக்கு பயிற்றுவித்தும் கொடுத்தார். அதோடு, தன்னிடம் இசை பயிலும் மாணவர்களிடம் அவர் பணமே பெற்றதில்லை.

இலவசமாகவே கற்றுக்கொடுத்தார். மேலும், நான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களின் பாடல் கேசட்டையும் அவருக்கு கொண்டு செல்வேன். ஆனால் அந்த பாடல்களை அவர் கேட்கும் வரை அங்கு நிற்கிற தைரியம் எனக்கு கிடையாது.

கேட்டு விட்டு ஏதாவது சொல்லப்போகிறார் என்று கேசட்டை வைத்து விட்டு ஓடி வந்து விடுவேன். அப்படிப்பட்ட எனது குருநாதரைப்பற்றி இப்போது நான் ஒரு இசைப்பாடல் உருவாக்கியிருக்கிறேன். அதை அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் பிப்ரவரி 28-ந்தேதி அன்று வெளியிடுகிறேன் என்கிறார்.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions