நடன இயக்குனர் என திறமையை காட்டும் பிரபல இசையமைப்பாளர்

Bookmark and Share

நடன இயக்குனர் என திறமையை காட்டும் பிரபல இசையமைப்பாளர்

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார்.

மேலும், இவர் இசையமைப்பாளர் என்றபோதும் நடனமாடுவதிலும் ஆர்வம் உள்ளவர். அதனால் தனது படங்களின் ஆடியோ விழா மேடைகளில் இவரே நடனமாடுவார்.

இவர் சில தெலுங்கு படங்களின் பாடல்களிலும் ஒரு தமிழ் படத்திலும் தோன்றி ஆடியிருக்கிறார். இந்த நிலையில் அவர், குமாரி 21 எப் -என்ற தெலுங்கு படத்துக்கு இசையமைப்பதோடு, ஒரு பாடலில் டான்ஸ் மாஸ்டராகவும் ஒர்க் பண்ணுகிறாராம்.

ராஜ்தருண், ஹேபா பட்டேல் நடிக்கும் இந்த படத்தில் அவர்களது ரொமான்டிக் பாடலை கம்போஸ் செய்தபோதே தனது கற்பனையில் ஒரு நடனத்தையும் சேர்த்து கம்போஸ் செய்தாராம் தேவிஸ்ரீ பிரசாத்.

இதை அவர் படத்தின் இயக்குனர் சூர்யா பிரதாப்பிடம் தெரிவித்தபோது, அந்த பாடலுக்கு நீங்களே நடனம் அமைத்து விடுங்கள் என்று சொன்னாராம். இதுவரை இசையமைப்பாளர் பாடகர், நடிகர் என்று மட்டும் இருந்த தேவிஸ்ரீ பிரசாத் இப்போது நடன இயக்குனராகவும் ப்ரமோஷன் பெற்றுள்ளார்.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions