மறைந்த இசை மேதை மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி

Bookmark and Share

மறைந்த இசை மேதை மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு தேவிஸ்ரீ பிரசாத் சிறப்பு அஞ்சலி

இன்று பல்வேறு மொழிகளில் கொடிகட்டி பறக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இசை ஆர்வம் ஊட்டியது மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸ்தான்.  கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாசுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் விதமாக தேவிஸ்ரீ பிரசாத் ஒரு பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸ் என்னுடைய குரு. அவருடைய நினைவாக "குருவே நமஹ" என்ற இசை ஆல்பத்தை வெளியிட இருக்கிறேன். அவருடைய திறமையையும் புகழையும் ஒரு பாட்டில் அடக்கிவிட முடியாது. இந்த பாடலை அவரது பிறந்த நாளான இன்று வெளியிட உள்ளேன்.

இன்று அவரது சகோதரர் மாண்டலின் ராஜேஷ் உட்பட பிரபல இசை மேதைகளான உஸ்தாத் அம்ஜத் அலி கான், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அவர்களோடு நானும் இணைந்து இசை வழங்க உள்ளேன் என்றார். 

தேவிஸ்ரீ பிரசாத் அவரது குருவுக்காக இந்த பாடலை வெளியிடுவது அவரது குரு பக்தியை பறைசாற்றுகிறது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions