நடிகராக களம் இறங்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

Bookmark and Share

நடிகராக களம் இறங்கும் தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவர் நடிக்க இருப்பதும் தெலுங்கு படம்தான்.

பிரபல தெலுங்கு விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான தில் ராஜு சமீபத்தில் நடந்த விழாவின் போது, தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தை நான் தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘புலி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இசையமைப்பாளராக வெற்றி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாகவும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions