ஸ்மோக்கிங்– டிரிங்கிங் 2 கிங்களை மறந்தால் நாம் தான் கிங்: தாமு

Bookmark and Share

ஸ்மோக்கிங்– டிரிங்கிங் 2 கிங்களை மறந்தால் நாம் தான் கிங்: தாமு

ஈரோட்டில் நடந்த கட்டிட பொருள் கண்காட்சியில் நடிகர் தாமுவின் பலகுரல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் தாமு பேசியதாவது:–

நான் இதுவரை 107 படங்களில் நடித்து உள்ளேன். கடந்த 4 வருடமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்து பலகுரல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இதுவரை 9 ஆயிரத்து 78 நிகழ்ச்சி நடத்தி உள்ளேன். கடவுளை நாம் கோவிலில் போய் கும்பிடுகிறோம்.

ஆனால் வீட்டில் இருக்கிற கடவுள் நமது அம்மா– அப்பா தான். அம்மா , அப்பாவை மதிக்க வேண்டும். அவர்கள் தான் நமது முதல் தெய்வங்கள். நம் உடலை நாம் தான் ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் 2 ‘கிங்’களை நாம் கைவிட்டால் அப்புறம் நாம் தான் கிங். அப்படி என்ன 2 ‘கிங்’என்று கேட்கிறீர்களா? அதாங்க ‘‘டிரிங்கிங்’’. ‘‘ஸ்மோக்கிங்’’. இந்த 2 கிங்கையும் விட்டு விட்டால் நாம் தான் கிங். என் அம்மாவுக்கு சொந்த ஊரு ஈரோடு வளையல்கார வீதி தான். அதனால் நானும் ஈரோடு காரன் என்று சொல்லி கொள்வதில் பெருமைபடுகிறேன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions