
கோ.தனஞ்செயன் எழுதிய PRIDE OF TAMIL CINEMA: 1931 to 2013 என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது இந்தியஜனாதிபதி திரு.பிரணாப்முகர்ஜியால் தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய திரைப்படங்கள்:1931 முதல் 2013 வரை என்ற தலைப்பிட்ட இந்த புத்தகம் தேசிய விருது பெற்ற தமிழ் படங்கள் பற்றியும், இந்தியன்பனோரமாவிழாவில் திரையிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றியும் ஆராய்ந்து, பல அரிய புகைப்படங்களுடன் 614 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்ட புத்தகமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நமது நாட்டின் கலாசார பெருமைகளை நிலை நாட்டிய படங்களை பற்றிய முக்கிய தொகுப்புஉடையது இந்தபுத்தகம். எண்பத்தி மூன்று ஆண்டுகள் கோலோச்சும் தமிழ் சினிமாவின் பெருமை பற்றியும் தேசிய அளவில் தமிழ் படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த நடுவர்களுக்கும் சமர்பிக்கபட்ட புத்தகம் இது.
இந்தபுத்தகத்தின் ஆசிரியர் கோ.தனஞ்செயன், எம்.பி.ஏபட்டப்படிப்பு படித்த, ஒரு வியாபார மேலாண்மை அதிகாரி ஆவார். தற்போது டிஸ்னி–யு.டி.விநிறுவனத்தின் பிரதான பொறுப்பில் இருக்கும் இவர் சினிமாவை பற்றிய ஆய்வுகட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிபிரபலம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு இவர் எழுதிய “பெஸ்ட்ஆப்தமிழ்சினிமா” சர்வதேச அரங்கில்பெரும் பெயர் ஈன்றது.இன்று. விருது பெற்றது பற்றி கோ.தனஞ்செயன் கூறும்போது“என்வாழ்க்கையில் ஒரு பொன்னானநாள் இன்று.
என் மனைவி மற்றும் அவர் தந்தையின் முன்னிலையில் ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது தமிழ் சினிமாவுக்கு உரித்தானது.
தமிழ்சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என்புத்தகத்திற்குகிடைத்த இந்தவிருதால், தமிழ்சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சிதருகிறது. இந்த விருது மேலும் எழுதவும் என்னை ஊக்குவிக்கிறது.”
Post your comment