தனஞ்செயனின் திரைப்பட அகாடமி துவக்க விழா: இயக்குனர்கள் பேராசிரியர்கள் ஆனார்கள்

Bookmark and Share

தனஞ்செயனின் திரைப்பட அகாடமி துவக்க விழா: இயக்குனர்கள் பேராசிரியர்கள் ஆனார்கள்

யுடிவியின் தென்மண்டல அதிகாரியாக இருக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன், ப்ளூ ஓஷன் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமியை துவக்கி உள்ளார். இதன் துவக்க விழா நேற்று (மார்ச் 4) சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இயக்குனர் மகேந்திரன், கே.பாக்யராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஒரு ஆண்டு பயிற்சி வகுப்புகளை கொண்ட இந்த அகாடமியின் வகுப்புகள் ஜூலை மாதம் முதல் துவங்குகிறது. இதில் இயக்குனர் பயிற்சியின் துறைத் தலைவராக இயக்குனர் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைக்கதை அமைப்பின் துறை தலைவராக கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு கீழ்  பார்த்திபன்,  ஞானராஜசேகரன், கே.ராஷேஸ்வர், சசி, வெங்கட்பிரபு, விஷணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், கார்த்திக் சுப்புராஜ், ஆர்.எஸ்.பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ், வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன் ஆகியோர் பேராசியர்களாக பணியாற்றுகிறார்கள்.

ஒளிப்பதிவு பயிற்சி துறை தலைவராக ஒளிப்பதிவாளர் மது அம்பாட் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ், பி.கண்ணன், மகேஷ் முத்துசாமி, சி.ஜே.ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

நடிப்பு துறை தலைவராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் ஷண்முகராஜன், சந்திர மோகன், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ரோகிணி பணியாற்றுகிறார்கள்.

எடிட்டிங் பிரிவுக்கு பி.லெனினும், திரைப்பட இதழியல் துறைக்கு கார்டூனிஸ்ட் மதனும் துறை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தயாரிப்பு பிரிவு துறைத் தலைவராக கோ.தனஞ்செயன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சின்னத்திரை பிரிவு தலைவராக குட்டி பத்மினி நியமிக்கப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
Mr.சந்திரமௌலி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்
தனஞ்செயனை பாராட்டிய ரஜினி
சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது!
இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி
பிலிம் அகாடமி தொடங்குகிறார் தனஞ்செயன்
தனஞ்செயன் புத்தகம் கமல் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions