பிலிம் அகாடமி தொடங்குகிறார் தனஞ்செயன்

Bookmark and Share

பிலிம் அகாடமி தொடங்குகிறார் தனஞ்செயன்

யுடிவி மோஷன் பிக்சர்சின் தென்பிராந்திய அதிகாரியான தனஞ்செயன் அந்த நிறுவனத்தின் சார்பில் தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். சினிமா கல்லூரிகளில் கவுரவ பேராசிரியராகவும், சினிமா எழுத்தாளராகவும் இருக்கும் தனஞ்செயன் விரைவில் சினிமாவை கற்றுத் தரும் அகாடமி ஒன்றை துவக்க இருக்கிறார்.

இதற்கு ப்ளூவோஷன் பிலிம் அண்ட் டி.வி.அகாடமி என்று பெயர் வைத்திருக்கிறார். இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் மகேந்திரன், கார்த்திக் சுப்புராஜ், ஏ.எல்.விஜய், வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன், நடிகர்கள் நாசர் ஆகியோர் இதன் ஒரு அங்கமாக இருந்து பணியாற்ற இருக்கிறார்கள்.

இவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். தனஞ்செயன் தயாரிப்பு நுணுக்கங்கள் பற்றியும், மகேந்திரன் இயக்கம் பற்றியும், பாக்யராஜ் திரைக்கதை பற்றியும், லெனின் எடிட்டிங் பற்றியும், நாசர் நடிப்பு பற்றியும், மது அம்பாட் வெளிப்புற படப்பிடிப்பு பற்றியும், பாடம் நடத்துவார்கள் என்று தெரிகிறது.

பாரதிராஜா அகாடமியின் செலபசை வடிவமைக்கிறார். இந்த அகாடமிக்கான ஆரம்பகட்ட பணிகள் டிசம்பர் மாதமே தொடங்கி விட்டது. இதில் தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், உள்பட 8 பாட பிரிவுகள் இருக்கும். வருகிற மார்ச் 4ந் தேதி கமல்ஹாசன் அகாடமியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.


Post your comment





Related News
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
Mr.சந்திரமௌலி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்
நடிகர்கள் போராடக்காரர்களை தூண்ட வேண்டாம்- பிரபல தயாரிப்பாளர்
தனஞ்செயனை பாராட்டிய ரஜினி
சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது!
இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி
தனஞ்செயனின் திரைப்பட அகாடமி துவக்க விழா: இயக்குனர்கள் பேராசிரியர்கள் ஆனார்கள்
தனஞ்செயன் புத்தகம் கமல் வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions