டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!

Bookmark and Share

டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!

நடிகையும், டாக்டரான தனன்யா, ஒரு டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார்.  ராஜாமோகன் இயக்கிய, 'குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தனன்யா.

பல் டாக்டரான இவர் அதன்பிறகு ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. சென்னையை சேர்ந்த டாக்டர்.

ஆரியன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். ஆரியன், சென்னை மருத்துவ கல்லூரியில் நரம்பியல் நிபுணராக இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. மே மாதம் ஆந்திராவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions