மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்

Bookmark and Share

மே 1-ல் தனன்யா திருமணம்- டாக்டரை மணக்கிறார்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தனன்யா. முதல் படத்திலேயே அற்புதமாக நடித்திருந்தார். அதன்பிறகு வெயிலோடு விளையாடு என்ற படத்தில் நடித்தார்.

இந்தப்படம் வெளிவரவில்லை. சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் தனது படிப்பை தொடர்ந்தார் தனன்யா. டாக்டரான தனன்யா, எம்பிபிஎஸ்., மற்றும் எம்எஸ் படித்துள்ளார்.

தனன்யாவின் பெற்றோர்களும் டாக்டர்கள் தான். இந்நிலையில் தனன்யாவுக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணி அவரது பெற்றோர் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

அதன்படி சென்னையை சேர்ந்த விக்ரம் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆர்யனும் டாக்டர் தான். இவர் சென்னையில் நரம்பியல் நிபுணராக இருக்கிறார்.

இவர்கள் இவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயமாகி, மே மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற மே 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில், தனன்யா-ஆர்யன் திருமணம், ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions