என் கனவு நிஜமானது : நடிகை தன்ஷிகா பேட்டி

Bookmark and Share

என் கனவு நிஜமானது : நடிகை தன்ஷிகா பேட்டி

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் புதிய படம் கபாலி. இதில் ரஜினிகாந்த், ‘தாதா’ வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். 

‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக தன்ஷிகா நடிப்பதாக தகவல் பரவியது. இவர், ‘பேராண்மை,’ ‘பரதேசி’ உள்பட பல படங்களில் நடித்தவர். ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பது பற்றி நிருபரிடம் தன்ஷிகா கூறியதாவது:- 

‘‘நான், சின்ன வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். என் சினிமா வாழ்க்கையில் இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

‘கபாலி’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே என்னிடம் கேட்டார்கள். நான் சில கோணங்களில் பார்ப்பது போல் ‘போட்டோ’ மட்டும் எடுத்தார்கள். படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறேனா? என்று எனக்கு தெரியாது. என்ன வேடம் என்று என்னிடம் சொல்லவில்லை.’’ என்றார் தன்ஷிகா.

மேலும்  கிஷோர், தினேஷ், கலையரசன் ஆகியோரும் ‘கபாலி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions