மலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு

Bookmark and Share

மலேசிய படப்பிடிப்பின் போது தன்ஷிகா கார் திருட்டு

‘கபாலி’க்கு பிறகு தன்ஷிகா நாயகியாக நடித்து வரும் படம் ‘ராணி’. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜயசாந்தி பாணியில் நடிக்கிறார். சமுத்திரக்கனியின் உதவியாளர் பாணி இயக்கும் இந்த படத்தில் ஒரு கொலை தொடர்பான விசாரணையை தன்ஷிகா மலேசியா சென்று நடத்துகிறார். அப்போது நடைபெறும் சம்பவங்களே திரைக்கதை.

‘ராணி’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மலேசியாவில் நடந்தது. தன்ஷிகா தங்கி இருந்த ஓட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுவர ரூ. 2 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு காரை ஏற்பாடு செய்து இருந்தனர்.

கேமரான் தீவு பகுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஓட்டலுக்கு திரும்ப தன்ஷிகா தயார் ஆனார். ஆனால் அப்போது பதட்டத்துடன் அங்கு வந்த டிரைவர் ‘‘காரை காணவில்லை, யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள்’’ என்று கூறியுள்ளார். மாயம் ஆன காரை கண்டு பிடித்து தரும்படி படத்தயாரிப்பாளர் அங்குள்ள போலீசில் புகார் செய்து இருக்கிறார். காரை மலேசியா போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
தன்ஷிகா, டி.ஆர்.விவகாரத்தால் கொதிக்கும் ரசிகர்கள் - கூலாக பதிலளித்த நடிகர்.!
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தேடி வருகின்றன: தன்ஷிகா
சம்பளம் வாங்காமல் தன்ஷிகா நடித்த படம்
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாரா கபாலி நடிகை தன்சிகா?
குடிகாரர்களிடம் இருந்து சிலம்பாட்டத்தின் மூலமே தன்னை காத்துக்கொண்டேன்: தன்ஷிகா
கற்பழிப்பு சம்பவத்தால் கொதித்து போன பிரபல நடிகை சாய் தன்ஷிகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions