கபாலி படப்பிடிப்பில் இரத்த காயமடைந்த தன்ஷிகா!

Bookmark and Share

கபாலி படப்பிடிப்பில் இரத்த காயமடைந்த தன்ஷிகா!

ரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  ரஜினியுடன் நடிக்க பல நடிகைகள் தவம் இருக்கும் போது தன்ஷிகாவுக்கு இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க டைரக்டர் ரஞ்சித் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் ரஜினியுடன் தன்ஷிகா ஓடி வருவது போன்று காட்சி படமானது. அப்போது எதிர் பாராதவிதமாக தன்ஷிகா கீழே தடுமாறி விழுந்தார். உடனே படப்பிடிப்பு குழுவினர் ஓடிச்சென்று அவர் எழுந்து நிற்க உதவி செய்தனர்.

மீண்டும் அவர் ரஜினியுடன் ஓடிவருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ரஜினியுடன் ஓடி வந்து கொண்டிருந்த தன்ஷிகா மீண்டும் கீழே விழுந்தார். இதில் அவரது கால்மூட்டு, இடுப்பு எலும்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

உடனே தன்ஷிகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அவர் 2 நாள் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியதால் தன்ஷிகா ரஜினியுடன் நடித்த அந்த காட்சியை மற்றொரு நாளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

தன்ஷிகா பல்வேறு படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், ரஜினியுடன் நடிக்க பயப்படுகிறார் போல. இதனால், ஏற்பட்ட பதட்டம் காரணமாகத்தான் அவர் கீழே விழுந்து விட்டார். இனியாவது பதட்டம் இல்லாமல் நடிப்பார் என்று நம்புகிறோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions