ரஜினிக்கு மகளா தன்ஷிகா?

Bookmark and Share

ரஜினிக்கு மகளா தன்ஷிகா?

அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித், ரஜினியின் கபாலி  படத்தை இயக்க இருக்கிறார்.

தாதாயிசம் கலந்த வேடத்தில் ரஜினி நடிப்பதால் படத்திற்கு கபாலி என்று பெயர் வைத்துள்ளனர். அப்படத்திற்கான போட்டோ ஷூட் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. அதில் ரஜினி, கலையரசன், அட்டகத்தி தினேஷ் உள்பட சிலர் கலந்து கொண்டார்கள். இன்றும் போட்டோ ஷூட் தொடர்கிறது.

அதில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இன்னும் சில தினங்களில் மலேஷியாவில் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

இப்படத்தில், ரஜினிக்கு மகளாக, போதை பழக்கத்திற்கு அடிமையான பெண்ணாக தன்ஷிகா நடிக்கயிருப்பதாக கடந்த  செய்திகள் வெளியாகின.

ஆனால் தன்ஷிகா கூறுகையில், ரஜினி படத்தில் நான் நடிக்கிறேன். அது மட்டும்தான் எனக்கு தெரியும். படத்தின் கதையோ, அதில் நான் எந்த மாதிரி கேரக்டரில் நடிக்கப்போகிறேன் என்பதோ எனக்கு தெரியாது.

அதனால் கபாலி படத்தில் நான் ரஜினிக்கு மகளாக நடிப்பதாக மீடியாக்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது என்று பதிலளித்தார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions