அரை டஜன் படங்களில் தன்ஷிகா

Bookmark and Share

அரை டஜன் படங்களில் தன்ஷிகா

பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி படத்தில் நடித்தபோது, முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் தன்ஷிகா. ஆனால், பரதேசி படத்தினால் தன்ஷிகாவுக்கு நன்மை விளையவில்லை.

அந்தப்படத்துக்குப் பிறகு அவருடைய நடிப்பில் வெளிவந்த ஒரே படம் - யா யா.  மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. யா யா வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தன்ஷிகா நடிப்பில் வேறு படங்கள் வெளிவரவில்லை. எங்கே போனார்? அரை டஜன் படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாகத்தான் இருக்கிறாராம் தன்ஷிகா.  

கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு ஆகியோர் நடிப்பில் மீரா கதிரவன் இயக்கி வரும் விழித்திரு படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் தன்ஷிகா. படப்பிடிப்பு தொடங்கி 2 வருடத்திற்கும் மேலாக தயாரிப்பிலேயே இருக்கிறது இந்தப்படம்.

பணம் போடுவதாக சொன்ன சிலர் பின்வாங்கிவிட, ஒன்றரை கோடி இருந்தால் படத்தை முடித்துவிடலாம் என்ற நிலையில் முயற்சி செய்து வருகிறார் மீராகதிரவன். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, அனேகமாக ஜூலை மாதம் விழித்திரு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இது தவிர, கீதாரி என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வரும் கிட்ணா படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தன்ஷிகா. இப்படத்தில் தன்ஷிகாவுக்கு கிராமத்துப் பெண் வேடம்.

இந்த இரண்டு படங்கள் தவிர, குறும்பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் காத்தாடி, மற்றும் மூன்று பேர்களுக்கிடையே பப் ஒன்றில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகிவரும் திறந்திடு சீசேம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வைபவுக்கு ஜோடியாக ஒரு படம் என மொத்தம் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தன்ஷிகா. இத்தனை படங்களில் நடித்து என்ன பிரயோஜனம்? ஒரு படமும் ரிலீஸ் ஆக வில்லையே!


Post your comment





Related News
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?
நடிகைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம் : தன்ஷிகா
ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
விலை மாதுவாக மாறிய தன்ஷிகா
முதல்நாளில் 55 கோடி வசூலை அள்ளிய கபாலி?
வான வேடிக்கைகளுடன் கபாலியை வரவேற்கும் ரசிகர்கள்!
ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?
ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions