இமேஜ் பற்றி கவலைப்படாத தன்ஷிகா!

Bookmark and Share

இமேஜ் பற்றி கவலைப்படாத தன்ஷிகா!

எஸ்.பி.ஜனநாதனின் பேராண்மை படத்தில் நடித்திருந்தாலும், பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த வேடம்தான் தன்சிகாவுக்கு பெரிய ரீச்சாக அமைந்தது.

அடுத்து அரவான், யா யா, திறந்திடு சீசே ஆகிய படங்களிலும் நடித்த தன்சிகா, தற்போது விழித்திரு என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.  

கிராமத்து கதாபாத்திரம்தான் என்றாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருக்கும் தன்ஷிகா, சமுத்திரகனி இயக்கி நடிக்க இருந்த கிட்னா படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தார். 

ஆனால் அந்த படத்தை ஆரம்பித்த நேரம் சமுத்திரகனிக்கு நடிப்பு வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படப்பிடிப்பை தொடங்காமல் நடிப்பில் தீவிரமாகி விட்டார்.

அதனால் சமுத்திரகனி படத்துக்காக காத்துக்கொண்டிருந்த தன்ஷிகா, பின்னர் உள்குத்து, காலச்சுவடு போன்ற படங்களில் கமிட்டாகி விட்டார். இதில் உள்குத்து படத்தில் அட்டகத்தி தினேசுடனும், காலச்சுவடு படத்தில் மெட்ராஸ் கலையரசனுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

இதையடுத்தும், மார்க்கெட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்களின் படங்களாக தேடிப்பிடித்து கமிட்டாகி வருகிறார் தன்ஷிகா.

மேலும், சில நடிகைகளைப்போன்று இமேஜை பாதிக்கும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லாமல், கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்றபடி முழுசாக மாறி நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறி வரும் தன்ஷிகா, அதற்கு உதாரணமாக, திறந்திடு சீசே படத்தில் பப்பில் சரக்கு அடித்தது போன்று தான் நடித்ததையும் கூறி வருகிறார்.


Post your comment





Related News
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
பாலியல் தொழிலாளி படத்தில் நடிக்க தன்ஷிகா என்ன செய்தார் தெரியுமா?
நடிகைகள் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை அவசியம் : தன்ஷிகா
ட்விட்டரில் ஒரே ஆபாசம், அருவருப்பாக இருக்கு: தன்ஷிகா #suchileaks
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
விலை மாதுவாக மாறிய தன்ஷிகா
முதல்நாளில் 55 கோடி வசூலை அள்ளிய கபாலி?
வான வேடிக்கைகளுடன் கபாலியை வரவேற்கும் ரசிகர்கள்!
ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?
ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions