தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது முறைப்படுத்தப்படும்: பட அதிபர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

Bookmark and Share

தியேட்டர்களில் படங்களை வெளியிடுவது முறைப்படுத்தப்படும்: பட அதிபர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழ் பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, சேரன், நடிகர் மன்சூர் அலிகான், அழகன் தமிழ்மணி, ஏ.எல்.அழகப்பன், கலைப்புலி சேகரன், அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன், எச்.முரளி, ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், பிரமிடு நடராஜன், கலைஞானம், திருமலை, ஷக்தி சிதம்பரம், பாபுகணேஷ், அமுதா துரைராஜ், பெப்சி விஜயன், ஜாகுவார் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் எஸ்.தாணு பேசும்போது, ‘‘பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் தியேட்டர்களில் திரையிடுவது குறித்து அனைத்து திரைப்பட சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்’’ என்று கூறினார்.

‘திரைப்படங்கள் வெளியீட்டை முறைப்படுத்த தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோருடன் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன என்றும் விரைவில் இதற்கு சுமுக தீர்வு காணப்படும் என்றும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

‘‘பட அதிபர் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக விருப்ப ஓய்வு திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள் சேரலாம். அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். தயாரிப்பாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள நிலம் வாங்கி கொடுக்கப்படும். இதற்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விரைவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்படும்.

கேபிள் டி.வி.யில் திரைப்படங்கள், பாடல்கள், டிரைலர்கள் ஒளிபரப்ப புதிய ஒப்பந்தம் போடப்பட உள்ளது. அதிக தொகையை யார் குறிப்பிடுகிறார்களோ அவர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும். எனவே தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் டிரைலர் மற்றும் பாடல்களை சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions