வட இந்தியாவில் தனுஷ் படப்பிடிப்பு!

Bookmark and Share

வட இந்தியாவில் தனுஷ் படப்பிடிப்பு!

மாரி படத்தை அடுத்து இப்போது வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். இதையடுத்து அவர் வருகிற ஜூலை மாதம் முதல் பிரபுசாலமன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

மணிரத்னத்தின் அலைபாயுதே பாணியில் ரயிலில் நடக்கும் ஒரு காதல் கதையில் இப்படம் உருவாகிறது. அதற்காக ஒரு ரயிலையே வாடகைக்கு எடுக்க இருக்கிறார்கள். மேலும், அப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வடஇந்தியாவில்தான் நடைபெறுகிறது.

அதனால் அங்குள்ள மலைப்பாதைகளில் ரயில் செல்லும் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த லொகேஷன் பார்த்து விட்டு வந்திருக்கிறார் பிரபுசாலமன். மேலும், அந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார் என்று விசாரித்தால், அதுபற்றிய எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள்.

ஆனால் தென்னிந்தியா, வடஇந்தியாவில் இருந்து பல நடிகைகள் வரவழைக்கப்பட்டு ஆடிசன் நடத்தியிருக்கிறாராம் பிரபுசாலமன். அவர்களில் இந்த கதைக்கு யார் பெட்டராக இருப்பார்கள் இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். இன்னும் ஓரிரு வாரத்தில் கதாநாயகி குறித்து உறுதியாக முடிவு எடுக்கப்பட்டு விடுமாம்.

அதோடு, இந்த படத்திற்கு முதலில் ஒரு மாதம் கால்சீட் கொடுத்திருக்கும் தனுஷ், அதன்பிறகு ஆகஸ்டு முதல் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம். ஆக, இந்த இரண்டு படங்களையுமே ஒரே நேரத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் தனுஷ். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions