அரசியல்வாதி,லோக்கல் பையனாக இரு வேடங்களில் தனுஷ்?

Bookmark and Share

அரசியல்வாதி,லோக்கல் பையனாக இரு வேடங்களில் தனுஷ்?

துரை செந்தில் குமாரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. 

துரை செந்தில்குமார் இயக்க உள்ள இப்படம் அரசியல் த்ரில்லர் படம். இரு வேடங்களில் இந்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கதை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அண்ணன் , தம்பியாக இரு வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். அண்ணன் தனுஷ் அரசியல்வாதியாகவும், தம்பி தனுஷ் லோக்கல் பையனாகவும் நடிக்கிறாராம்.

அண்ணன் தனுஷுக்குத்தான் வித்யா பாலனை ஜோடியாக்க படக்குழு முயன்றனர். ஆனால் அவர் மறுக்கவே இப்போது அந்த கேரக்டரில் லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார். தம்பிக்கு ஜோடியாக ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மச்சினியுமான  ஷாமிலியை தேர்வு செய்துள்ளனர். 

படத்தின் ஒரு தனுஷ் வில்லனாக இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. எனினும் தனுஷின் நடிப்பிற்கு தீணி போடும் படமாக இந்தப் படம் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


Post your comment





Related News
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions