மீண்டும் பள்ளி மாணவனாகிறார் தனுஷ்..!

Bookmark and Share

மீண்டும் பள்ளி மாணவனாகிறார் தனுஷ்..!

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.  

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என்று முதலில் சொல்லப்பட்டது. பிறகு தனுஷ் அதை மறுத்ததோடு இது வேறு கதை என்று விளக்கம் அளித்தார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் தனுஷுடன் எமி ஜாக்சன் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் சென்னை கே.கே.நகரில் உள்ள பாரதிதாசன் காலனியில் நடைபெற்றது.

அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளின் அடிப்படையில்... இப்படத்தின் கதை பற்றி சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தில் தனுஷ் ப்ளஸ்2 படிக்கும் மாணவராக நடிக்கிறாராம். அவருடன் படிக்கும் சக மாணவியாக எமி ஜாக்சன் நடிக்கிறாராம்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்திலும் பள்ளி மாணவனாக நடித்திருந்தார் தனுஷ். அப்படத்தின் வெற்றியை மனதில் வைத்தே இந்தப் படத்திலும் தனுஷை பள்ளி மாணவனாக்கி இருக்கிறார் வேல்ராஜ்.

பள்ளி மாணவனாக நடிப்பதற்கு ஏதுவாகத்தான் மீசை தாடியை மழித்துவிட்டு சின்னப்பையன் லுக்கில் இருக்கிறார் தனுஷ். விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions