பிரபுசாலமன் படத்தில் டீ-பையனாக தனுஷ்

Bookmark and Share

பிரபுசாலமன் படத்தில் டீ-பையனாக தனுஷ்

மாரி, விஐபி-2 படத்தில் நடித்து முடித்த தனுஷ், பிரபுசாலமனின் படத்தில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒரு நடிகையின் டச்சப் பெண்ணாக கீர்த்தி சுரேசும், தம்பி ராமைய்யா நடத்தும் கேட்டரிங்கில் வேலை செய்யும் டீ பாயாக தனுசும் நடித்து வருகிறார்.

ஆனால் கீர்த்தி சுரேசை டச்சப் பெண் என்று தெரியாமல் நடிகை என நினைத்து அவர் மீது காதல் கொள்வாராம் தனுஷ். அதேப்போல் கீர்த்தி சுரேசுக்கும் அவர் மீது காதல் பிறக்குமாம். அப்போதுதான், தான் நடிகை என்ற நினைத்த அந்த பெண் ஒரு நடிகையின் டச்சப் பெண் என்பது தனுசுக்கு தெரிய வர இறுதியில் அவர்கள் இணைகிறார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதையாம்.

மேலும், முதல் பாதியை காதல், காமெடி என கலகலப்பாக இயக்கியுள்ள பிரபுசாலமன், இரண்டாம் பாதியாக ஆக்சன் கதையில் இயக்குகிறார். காதல் உருவாகும் காட்சிகளை இதுவரை சென்னையில் செட் அமைத்து படமாக்கினர்.

மேலும் படத்தின் பிற்பாதி முழுக்க ரயிலுக்கு வெளியே நடக்கும் காட்சிகள் என்பதால் விரைவில் சென்னையில் படப்பிடிப்பை முடித்து விட்டு வட இந்தியாவிற்கு போகிறார்களாம் தனுஷ்-பிரபுசாலமன் டீம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions