தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி நீக்கம்?

Bookmark and Share

தனுஷ் படத்திலிருந்து ஷாம்லி நீக்கம்?

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களைத் தொடர்ந்து துசை.செந்தில்குமார் இயக்கும் கொடி படத்தில் முதன்முறையாக இரட்டைவேடமேற்றிருக்கிறார் தனுஷ். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி முதல்வாரத்திலிருந்து பொள்ளாச்சி பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்தப்படத்தில் இரண்டு தனுஷ் என்பதால் நாயகிகளும் இருவர். ஒரு தனுஷூக்கு த்ரிஷாவும் இன்னொரு தனுஷூக்கு அஜித்தின் மைத்துனி ஷாம்லியும் நடிக்கவிருந்தார்கள். த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட செய்திகள் வெளியில் வந்தது. 

ஷாம்லி பற்றி எந்தத் தகவலும் இல்லை. என்னவென்று பார்த்தால், படத்தில் ஷாம்லி இல்லை என்று சொல்லப்படுகிறது. படக்குழுவினர் அவரை நீக்கிவிட்டார்களா? அவரே படத்திலிருந்து விலகிக்கொண்டாரா? என்பது தெரியவில்லை படத்தில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள். 

தவிர, அவருக்குப் பதிலாக பிரேமம் மற்றும் விஜயசேதுபதியின் காதலும்கடந்துபோகும் ஆகிய படங்களில் நடித்திருக்கும் மடானோசெபாஸ்டின் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions