ஹாலிவுட் படம் டிராப் இல்லை: ஹீரோ தனுஷ் தான், ஆனால்...

Bookmark and Share

ஹாலிவுட் படம் டிராப் இல்லை: ஹீரோ தனுஷ் தான், ஆனால்...

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் அவர் தான் ஹீரோ. ஆனால் அவரை தவிர மற்றவர்கள் எல்லோரும் மாறிவிட்டனர்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார் தனுஷ். அங்கிருந்து அவர் ஹாலிவுட்டும் செல்லவிருந்தார். 

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். எங்கள் அண்ணா ஹாலிவுட் போகிறார் என்று தனுஷ் ரசிகர்கள் துள்ளிக் குதித்தார்கள்.

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தை இயக்குவதாக இருந்த மர்ஜான் சத்ராபிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சத்ராபி படத்தில் இருந்து விலகினார்.

தனுஷ் ஒப்பந்தமான படத்தில் பிரபல நடிகை உமா தர்மன் நடிப்பதாக வேறு கூறப்பட்டது. இந்நிலையில் சத்ராபி படத்தில் இருந்து வெளியேற படம் டிராப்பானதாக செய்திகள் வெளியாகின.

சத்ராபி வெளியேறிய நிலையில் ஸ்டார்பக் பட இயக்குனர் கென் ஸ்காட் தனுஷ் படத்தை இயக்க உள்ளார். மேலும் படத்தில் உமா தர்மன் அல்ல மாறாக பெரினிஸ் பெஜோ நடிக்க உள்ளாராம்.

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி ஃபகிர் படத்தில் தனுஷை தவிர மற்றவர்கள் மாறியுள்ளனர். தனுஷ் வரும் மே மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆக, தனுஷ் ஹாலிவுட் செல்வது உறுதியாகிவிட்டது.


Post your comment





Related News
தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
தனுஷ் குடும்பத்துல இருப்பவரே இன்னும் ப.பாண்டி படத்த பாக்கலயா?
சிம்பு படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரிலீசாகும் தனுஷ் படம்
ஹாலிவுட், கார்த்திக் சுப்புராஜ் படம், பவர் பாண்டி-2 என பல தகவல்களை வெளியிட்ட தனுஷ்
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்
தனுஷின் அப்பா திடீர் ஆவேசம்! நடந்தது என்ன
அவங்கள விட்டுடுங்க ப்ளீஸ்- இப்படி தனுஷ் யாரை கூறினார் தெரியுமா?
விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions