தனுஷூக்கு சிறப்பு வாய்ந்த பிப்ரவரி மாதம்

Bookmark and Share

தனுஷூக்கு சிறப்பு வாய்ந்த பிப்ரவரி மாதம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷிற்கு இந்த பிப்ரவரி மாதம் ஸ்பெஷலான மாதமாக அமைந்திருக்கிறது. இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ள ‘ஷமிதாப்’ படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள ‘அனேகன்’ படம் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தனுஷின் நண்பரான சிவகார்த்திகேயனுக்கு வரும் 17-ம் தேதி பிறந்தநாள்.

மேலும் ‘அனேகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பு 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காக்கி சட்டை’ படம் இம்மாதம் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் நிகழ உள்ளதால், ஸ்பெஷல் பிப்ரவரி என்று தனுஷ் கூறியுள்ளார். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions