தனுசுக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஹாலிவுட் மாஸ்டர்

Bookmark and Share

தனுசுக்கு சண்டை பயிற்சி அளிக்கும் ஹாலிவுட் மாஸ்டர்

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் பிரபு சாலமன் அடுத்த படத்தை இயக்குகிறார். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். பிரபு சாலமன் இயக்கும் பக்கா ஆக்ஷன் கதைப் படம்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ரெயில் பயணத்தில் நடக்கும் கதை. எனவே படத்தில் ரயில் ஒரு முக்கிய கேரக்டராகவே வருகிறது. ரயிலின் உட்புற காட்சிகள், மற்றும் ரயில் சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட ரயில் ஷெட் போடப்பட்டுள்ளது.

தனுசுக்கு சண்டை பயிற்சி அளிக்க, பிரபல ஹாலிவுட் சண்டை இயக்குனர் ரோகர் யுயன் வரவழைக்கப்பட்டுள்ளார். ரயில் ஷெட்டை சுற்றிப்பார்த்த அவர் சண்டைக் காட்சிகளை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து பிரபுசாலமனுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று அமெரிக்கா சென்று விடும் அவர் மீண்டும் ஜூலை 15ந் தேதி சென்னை வருகிறார். ஒரு மாதம் வரை இங்கு தங்கியிருந்து தனுசுக்கு சண்டை பயிற்சி அளிப்தோடு முக்கிய சண்டைக் காட்சிகளையும் வடிவமைக்க இருக்கிறார்.

ரோகர் யுயன் எக்ஸ்மேன், ஷங்காய் நூன், பேட்மேன் பிகின்ஸ், ஸ்கைபால் (ஜேம்ஸ் பாண்ட் படம்) ஆகியவற்றில் சண்டை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions