தனுஷின் புதிய முகம்!

Bookmark and Share

தனுஷின் புதிய முகம்!

தமிழ் சினிமா நடிகர்களில் சித்தார்த், விஷால், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் உதவி இயக்குனர்களாக வேலை செய்த அனுபவத்துடன்தான் ஹீரோவானார்கள். ஆனால் தனுஷோ, அப்படியல்ல, பத்தாவது படித்துக்கொண்டிருந்தபோதே துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாகி விட்டார்.

அதனால் அவருக்குள் உதவி இயக்குனராக ஒர்க் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருந்தபோதும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லையாம்.

அதனால் தற்போது தான் தயாரித்து நடிக்கும் படங்களில் அவர் ஒரு உதவி இயக்குனராகவும் பேடு, பேப்பருடன் ஸ்பாட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அதோடு, வேலையில்லா பட்டதாரி படத்தின்போது சில காட்சிகளையும் தானே படமாக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார் தனுஷ்.

அப்படி அந்த படத்தில் ஆக்சன், கட் சொல்லத் தொடங்கிய தனுஷ், தற்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தபோது டைரக்ஷனில் இன்னும் கூடுதல் ஆர்வம் காட்டினாராம். குறிப்பாக, விஐபி-2 படத்தின் இயக்குனரான வேல்ராஜ், பாயும்புலி படத்தில் கேமராமேனாக வேலை செய்வதற்காக மதுரைக்கு சென்றிருந்தபோது, ஒரு அசோசியேட்டை வைத்துக்கொண்டு சில நாட்கள் தனுசும் படப்பிடிப்பை நகர்த்தினாராம். அதனால் இதுவரை நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என நான்கு முகம் காட்டி வந்த தனுஷ். விரைவில் இயக்குனர் முகத்தையும் வெளிக்காட்டுவார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions