தனுஷ் படத்தை இயற்கை அழகு மிளிர படமாக்கும் பிரபுசாலமன்!

Bookmark and Share

தனுஷ் படத்தை இயற்கை அழகு மிளிர படமாக்கும் பிரபுசாலமன்!

பிரபுசாலமன் இயக்கிய முதல் படம் கண்ணோடு காண்பதெல்லாம். அதையடுத்து, விக்ரம் நடித்த கிங். கரண் நடிப்பில் கொக்கி, சிபிராஜ் தயாரித்து நடித்த லீ, அடுத்து லாடம் என பல படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

அதனால் அடுத்தபடியாக மைனா படத்திற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஆரம்பித்தார் பிரபுசாலமன். அந்த படத்தில் விதார்த்தை நாயகனாக அறிமுகம் செய்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் உருவான அந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

அதில் தொடங்கிய ஹிட் பின்னர் கும்கி, கயல் வரை தொடர்ந்தது.  ஆக, இப்போது பேசப்படும் இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார் பிரபுசாலமன். அதனால் அடுத்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களை இயக்கும் முடிவுக்கு வந்தபோது தான் தனுஷ் அவர் மனதில் தோன்றியிருக்கிறார்.

ஆனால், அப்படி அவர் தோன்றியதற்கு காரணம், அவருக்கு மைனாவுக்கு முன்பே ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருந்தாராம் பிரபுசாலமன். அப்போதைய சூழ்நிலையில் அத்தனை பெரிய பட்ஜெட்டில் யாரும் தன்னை நம்பி படம் பண்ண வரமாட்டார்கள் என்பதால், அதைப்பற்றி யோசிக்காமல இருந்த பிரபுசாலமன், இப்போது அந்த மெகா கதையை அதே தனுசுக்காக கையில் எடுத்திருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தனுஷைக்கொண்டு பிரபுசாலமன் இயக்கும் புதிய படம் இதுவரை அவர் இயக்கிய படங்கள் மட்டுமின்றி, இதுவரை தனுஷ் நடித்த படங்கள் அனைத்தையும் விட அதிக பட்ஜெட்டில் இருக்குமாம்.

குறிப்பாக, பெருவாரியான காட்சிகள் வடஇந்தியாவில் முக்கியமாக ரயிலேயே படமாக்கப்பட இருப்பதால், கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாம். அதோடு மலைகளையும், அதை சார்ந்த இயற்கை அழகினையும் இந்த படத்தில் தனது முந்தைய படங்களை விட அழகு மிளிர படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் பிரபுசாலமன்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions