பாடல்களில் புதுமை சேர்த்த தங்கமகன் தனுஷ்!

Bookmark and Share

பாடல்களில் புதுமை சேர்த்த தங்கமகன் தனுஷ்!

“நாட்டுக்கட்ட நச்சுன்னுதான்” இருக்கு என்ற பாடலை சொந்த குரலில் பாடி பின் தொடர்ந்து தான் நடித்த படங்களில் பாடி வந்த தனுஷ், 3 படத்தில் அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடினார். அந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது. 

அதனால் இப்போது தனது படங்களில் தொடர்ச்சியாக பாடுவது, பாடல் எழுதுவது என இரண்டிலும் தனது பங்களிப்பை செலுத்தி வரும் தனுஷின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது.

இதனால்தான் முதலில் ஓரிரு பாடல்களை மட்டுமே எழுதி வந்த தனுஷ் இப்போது தனது படங்களில் அதிகமான பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்பாக, வேலையில்லா பட்டதாரி படத்தை அடுத்து வேல்ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள தங்கமகன் படத்தில் அனைத்து பாடல்களையுமே எழுதி, படத்தில் போஸ்டரிலும் போயட் தனுஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த படத்திற்காக  படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் மரம் செடி கொடிகள் படர்ந்துள்ள பகுதிகளில் தனிமையில் சேர் போட்டு அமர்ந்து பாடல் எழுதினாராம்.

அதோடு, வார்த்தைகள் ரொம்ப புதுசாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடலில் ஈடுபட்ட தனுஷ், இன்றைய இளவட்டங்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் வார்த்தைகளை பாடல்களில் புகுத்தி புதுமை செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions