தனுஷை எரிச்சலாக்கினார்களா தெலுங்கு பத்திரிக்கையாளர்கள்?

Bookmark and Share

தனுஷை எரிச்சலாக்கினார்களா தெலுங்கு பத்திரிக்கையாளர்கள்?

சினிமாவாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் ஒருவரின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பத்திரிக்கையாளர்கள்தான். அரசியலில் கூட பல பாலிடிக்ஸ் நடந்துவிடும் ஆனால் சினிமாவில் ஒரு நட்சத்திரம் வளர்வதும், வீழ்வதும் பத்திரிக்கையாளர்களிடம்தான் இருக்கிறது, அவர் எவ்வளவு நட்பாக பழகுகிறார் என்பதை பொருத்தே அவர் பெரிய ஸ்டாராக வளர அடித்தளமிடுவார்கள் பத்திரிக்கை நண்பர்கள்.

இதில் தனுஷ் கடந்த சில வருடங்களாகவே மீடியாக்களிடமிருந்து விலகியே காணப்படுகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இவரின் கொடி மேலோங்கியே காணப்படுகிறது, “வொய் திஸ் கொலவெறி” பாடல் மூலம் உலகப்புகழ் பெற்று இண்டு இடுக்கில் இருப்பவர்களை கூட இந்த பாடலை முணுமுணுக்க வைத்துவிட்டார்கள் இவரும் அனிருத்தும், ஆனால் இப்போது அதே பாடலால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் தனுஷ்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் அனேகன் படத்தில் தெலுங்கு டப்பிங்கான “அனேகடு” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்ட இயக்குநர் கே.வி.ஆனந்த், தனுஷ் ஆகியோர் மேடையில் ஏறியதும் பத்திரிக்கை நண்பர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்கள் அப்போது ஒரு பத்திரிக்கையாளர் “வொய் திஸ் கொலவெறி” பாடலை எங்களுக்காக பாடவேண்டும் என்று கேட்டார், இதற்கு பதிலளித்த அவர் “இந்த பாடல் என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுது, எங்க போனாலும் இந்த பாட்டை பாடச்சொல்லி வெறுப்பேத்துறாங்க” என்று கூறிவிட்டார்.

”இது தெலுங்கு பத்திரிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.  இவ்வளவு நடந்தும் கடைசியில் அனேகன் படத்திலிருந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார் அதுவும் தமிழில் பாடியதால் பலரின் வயிற்றெரிச்சலை வாரி சட்டை பைக்குள் போட்டுக் கொண்டுள்ளார் தனுஷ்.

அனேகன் பாடலை பாடிவிட்டு மீண்டும் பேசிய தனுஷ் “எனக்கு பாடுவது பிடிக்கும் ஆனா போற இடத்துல எல்லாம் பாட சொன்னா எப்படி இது பிரஸ்மீட் தானே” என்று சாக்கு சொல்லிவிட்டாராம். 


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions