கீர்த்தி சுரேஷுடன் அசாம் செல்லும் தனுஷ்

Bookmark and Share

கீர்த்தி சுரேஷுடன் அசாம் செல்லும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் தற்போது வெளிவர காத்திருக்கும் படம் ‘மாரி’. இப்படத்தையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். பிரபு சாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதற்கட்டமாக துணை நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்த கட்டமாக அசாமில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

அங்கு தனுஷ், கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளனர். இதற்காக படக்குழுவினர் முன்னதாகவே அசாமிற்கு சென்றுவிட்டனர். தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் விரைவில் செல்லவுள்ளனர்.

தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions