இரட்டை வெற்றி தந்த சந்தோஷத்தில் தனுஷ்

Bookmark and Share

இரட்டை வெற்றி தந்த சந்தோஷத்தில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த வெளியீடாக வெளிவந்த ‘ஷமிதாப்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு படங்களிலும் தனுஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதற்காக இரவு-பகல் பாராது அயராது பாடுபட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது. இது தனுஷுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, அடுத்தடுத்து எனது படங்களின் வெளியீட்டுக்காக கடந்த 3 மாதங்களாக தூக்கமில்லாமல் பணிபுரிந்தேன். கடைசியாக இந்த ஞாயிற்றுக்கிழமையில் அமைதியாகவும், மலர்ந்த முகத்துடனும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் அடுத்த வெளியீடாக ‘காக்கிச்சட்டை’ படம் வரும் 27-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மேலும், விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் ரௌடிதான்’ படத்தையும் தனுஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions