அட... தனுஷே சொல்லிட்டாரே... அப்ப கரெக்ட்தான்...!

Bookmark and Share

அட... தனுஷே சொல்லிட்டாரே... அப்ப கரெக்ட்தான்...!

சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் 50 நாள் ஓடுகிறதோ, 100 நாள் ஓடுகிறதோ அது 50 கோடியை வசூலித்ததா, இல்லை 100 கோடிடையத் தொடுமோ என்பதுதான் ரசிகர்களிடம் இருக்கும் ஒரே பேச்சாக இருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் ஒரு படம் 25வது நாளைக் கடப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அதே சமயம் 25 கோடி ரூபாய் வசூலைக் கடந்தால் ஓரளவுக்கு வெற்றிப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. படம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைக் கூட யாரும் பார்ப்பதில்லை.

அந்தப் படம் வசூலிக்கிறதா இல்லையா என்றுதான் பார்க்கிறார்கள். நிலைமை அப்படி மாறிவிட்டிருக்கிறது, அதிலிருந்து நாயகர்களும் தப்ப முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால் படம் வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளேயே படத்தின் வசூல் என்ன என்பதை அவர்களே விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலையும் உருவாகிவிட்டது.

தனுஷ் நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான 'அனேகன்' படம் இரண்டு நாட்களில் இருபது கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தனுஷே நேற்று டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும சுமார் 700 தியேட்டர்களில் படம் வெளியாகியுள்ளது என்பதையும் அவர்களே தெரிவித்தார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் வெளியானது என்பதையும் வெளியீட்டிற்கு முன்னரே அறிவித்தார்கள்.

வசூலைப் பற்றிய அறிவிப்புகளை ஒரு நாயகனே வெளியிடுவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற நாயகர்களின் படங்கள் எவ்வளவு வசூல் என்பதை இதுவரை மீடியாக்கள்தான் வெளியிட்டு வந்தன.

அதையும் தற்போது தனுஷே அதிகாரபூர்வமாக சொல்லியிருப்பதால் கண்டிப்பாக அந்த வசூலும் உண்மையாகவே இருக்கும் என்று தனுஷின் ரசிகர்கள் அதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள். இனி, வசூல் விவரங்களை வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் சொல்வதற்கு முன்பே நாயகர்கள் மூலமும் நாம் தெரிந்து கொள்ளலாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions