ஓடும் ரயிலில் தனுஷ் படப்பிடிப்பு!

Bookmark and Share

ஓடும் ரயிலில் தனுஷ் படப்பிடிப்பு!

தனுஷ், பிரபுசாலமன் இணையும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்படத்திலும், தனது மைனா படத்தில் நடித்த அமலாபால், கும்கியில் நடித்த லட்சுமிமேனன் ஆகியேரைப்போன்று மலையாள நடிகையாக தேடிக்கொண்டிருந்த பிரபுசாலமனுக்கு சரியான புதுமுக நடிகை கிடைக்கவில்லை . அதனால் பல படங்களில் நடித்துள்ள இன்னொரு மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்து விட்டார்.

மேலும், தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2 படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டி விட்டதால் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்குகிறார் பிரபுசாலமன். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வட இந்தியாவிலேயே நடப்பதால், இம்மாதம் இறுதியில் ஒரு யூனிட் அங்கு சென்று முகாமிட்டு படப்பிடிப்புக்கு தேவையான வேலைகளை ஆரம்பிக்க உள்ளார்களாம்.

அதோடு, இப்படம் ரயிலில் நடக்கும் காதல் கதை என்பதால், முக்கால்வாசி படப்பிடிப்பு ஓடும் ரயிலுக்குள்தான் நடக்கிறதாம். அதனால் காட்சிகள் போரடிக்காமல் இருக்க, லவ் ட்ராக் ஒரு பக்கம் ஓடினாலும், ரயிலில் பயணிக்கும் பயணிகளாகவும் சில முக்கிய நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து, அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம், காமெடிபோன்ற விசயங்களையும் கலந்து படமாக்கப்படுகிறதாம் பிரபுசாலமன்.

அந்த வகையில், தம்பி ராமைய்யா போன்ற கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள் மட்டுமின்றி சில முக்கிய காமெடியன்களும் இந்த படம் முழுக்க நடிக்கிறார்களாம்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions