கன்னட படத்திற்கு பாட்டு பாடிய தனுஷ்

Bookmark and Share

கன்னட படத்திற்கு பாட்டு பாடிய தனுஷ்

தனுஷ் சிறந்த பாடகர் என்று அனைவருக்கும் தெரியும். இவர் நடித்த படங்களான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘தேவதையை கண்டேன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். 3 படத்தில் இவர் பாடிய ‘கொல வெறி’ பாடல் பட்டி தொட்டியெங்கும் எதிரொலித்தது.

இதையடுத்து பல படங்களுக்கு பாட்டு பாடும் வாய்ப்பு தனுஷுக்கு வந்த வண்ணம் உள்ளது. தமிழ் படங்கள் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் தனுஷை பாட அழைக்கிறார்கள். படங்களில் பிசியாக தனுஷ் நடித்து வருவதால் குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே பாட்டு பாடி வருகிறார். தற்போது தனுஷ் கன்னட படத்திற்கு ஒரு பாடல் பாடியுள்ளார்.

கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஷுவ்ராஜ் குமார், வஜ்ரகயா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை பாட வைத்துள்ளனர்.

‘நோ பிராபிளம்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions