குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை... தனுஷ் வருத்தம்

Bookmark and Share

குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை... தனுஷ் வருத்தம்

தனுஷ் நடித்துள்ள மாரி இன்று வெளியாகவிருக்கிறநிலையில் படத்தின் புரமோஷனுக்காக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் தனுஷ்!

 படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக மீடியாக்களை சந்திப்பதால் படத்துக்கு பெரிய நன்மை விளையப்போவதில்லை என்பது தெரியாமலே, மாரி படத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் தனுஷ். பின்னர் பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று... பாகுபலி மிகப் பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் இது மாரி படத்தை பாதிக்குமா?” அதற்கு பதில் அளித்த தனுஷ் “பாகுபலி கடந்த வாரம் வெளியானது. மாரி நாளை தான் ரிலீசாகிறது. பாகுபலி படத்தின் வெற்றி ஒருபோதும் மாரியை பாதிக்காது. காரணம் பாகுபலி படத்திற்கான ஆடியன்ஸ் வேறு,

மாரிக்கான ஆடியன்ஸ் வேறு! அந்த படத்திற்கும் மாரி படத்திற்கும் எந்த சமபந்தமும் இல்லை! ஒரே தினம் இரண்டு படங்களும் ரிலீசாகியிருந்தால் ஒருவேளை சிறிய பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த படம் ரிலீசாகி ஒரு வாரம் கழித்துத்தானே மாரி வருகிறது. அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது'' என்றார்.

 

அதற்கு முன்னதாக கேள்விகேட்ட ஒரு பெண் நிருபர், நீங்கள் பத்திரிகையாளார்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன்? என்று கேட்டார். வேண்டுமென்றே நான் அவாய்ட் பண்ணவில்லை. பட வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். உங்களை மட்டுமல்ல என் குழந்தைகளுடன் கூட என்னால் நேரம் செலவிட முடியவில்லை என்றார்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions