'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ்...!

Bookmark and Share

'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ்...!

'அனேகன்' படம் வெளியானதிலிருந்து தனுஷ் ரசிகர்களின் ஆட்டம் தாங்க முடியவில்லை. படம் சூப்பர் ஹிட், என்றும் ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் வசூலிக்கிறது என்றும் அவர்களே செய்திகளை கிளப்பிவிட்டு, அதை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷும் சளைக்காமல் அவற்றை அவருடைய டிவிட்டர் கணக்கில் 'ரிடிவீட்' செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு படம் வெளியான பிறகு அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் பல நடிகர், நடிகைகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் மட்டுமே அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

தனுஷின் அதி தீவிர ரசிகர் ஒருவர் தனுஷை 'இளைய சூப்பர் ஸ்டார்' என ஒரு பதிவைப் போட, அதை தனுஷும் ரிடிவீட் செய்திருப்பதன் மூலம் அவருக்கும் அப்படி ஒரு பட்டத்தின் மீது ஆசை இருப்பது புரிய வருகிறது.

ஏற்கெனவே சிம்பு தன்னை 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று அழைத்துக் கொண்டிருந்தார். கடந்த வருடம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்காக அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொண்டார்கள்.

தற்போது தனுஷுக்கு அவருடைய ரசிகர்கள் புதிதாக ஒரு பட்டத்தைக் கொடுத்து புதிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். அஜித் அவருடைய பெயருடன் போட்டுக் கொண்டிருந்த 'அல்டிமேட் ஸ்டார்' பட்டத்தை பெயருக்கு முன்னால் போடக் கூடாது என்று எப்போதோ சொல்லிவிட்டார்.

கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படங்களில் அப்படி எந்த ஒரு பட்டப் பெயரும் இடம் பெறாமல் வெறும் 'அஜித்குமார்' என்று மட்டுமே போடப்பட்டு அவர் படத்தின் விளம்பரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 'பவர் ஸ்டார்' என்றெல்லாம் வந்த பிறகு அந்தப் பட்டங்களை ரசிகர்களே விரும்பாமல்தான் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions