ஹாலிவுட் படத்தில் தனுஷ்.?

Bookmark and Share

ஹாலிவுட் படத்தில் தனுஷ்.?

'கொல வெறி' பாடல் தனுஷை உலகப் புகழ் பெற வைத்தது. அதன் பலனாக ஹிந்திப் பட உலகிலும் அவர் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து.

'ராஞ்சனா, ஷமிதாப்' என இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து முடித்து விட்டார் தனுஷ். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் எனத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ஜானி சட்ராபி என்ற பிரெஞ்ச் - இரானிய திரைப்பட பெண் இயக்குனர், 'The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe' என்ற  ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கும் படம் ஒன்றில் தனுஷை நாயகனாக நடிக்க வைக்கப் பேசி வருவதாக அவரே கேன்ஸ் திரைப்பட விழாவில் தெரிவித்துள்ளார்.

டில்லியிலிருந்து பிரான்ஸுக்குப் பயணமாகும் ஒருவன் பிரெஞ்ச் பெண் ஒருவருடன் காதல் வயப்படுவதுதான் படத்தின் கதை. மர்ஜானி சட்ராபி அவருடைய பிரெஞ்ச் - இரானிய அனிமேஷன் படமான 'பெர்சிபோலிஸ்' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றவர்.

அந்தப் படம் ஆஸ்கர் விருது  போட்டியிலும் கலந்து கொண்டுள்ளது. இப்போதைக்கு இந்தியப் பட நாயகனாக இருக்கும் தனுஷ், இந்தப் படத்தில் நடித்தால் இனி உலக நாயகன் என தாராளமாக அழைக்கப்படலாம்.

 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions