தனுஷிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

Bookmark and Share

தனுஷிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், அந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகும்போது, அந்த படங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பப்ளிசிட்டி செய்வது சகஜமாகி வருகிறது.

அப்படி போடப்படும் வழக்குகள் அவர்களின் படங்கள் ரிலீசாவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு வாபசாகி விடும். இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேலும், வேலையில்லா பட்டதாரி படம் வெளியாவதற்கு முன்பு புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு கூட்டினார் தனுஷ்.

அதற்கு சமூக ஆர்வலர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த காட்சியையே படத்தில் இருந்து நீக்குவதாக கூறினர். அதையடுத்து முன்னணி ஹீரோக்கள் பலரும் புகை பிடிப்பது, சரக்கு அடிப்பது மாதிரியான காட்சிகளில் நடிப்பதைகூட நிறுத்தி விட்டனர்.

ஆனால் தனுஷ், இப்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துள்ள மாரி படத்தில் புகை பிடிப்பது போன்ற டீசரை வெளியிட்டுள்ளனர். இதனால் தனுஷிற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது.

குறிப்பாக, தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் இப்படி சமூக பொறுப்பில்லாமல் சிகரெட் பிடித்தபடி போஸ் கொடுப்பது சரியா? என்று இணைய தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆக, சத்தமில்லாமல் இருந்த மாரி படத்துக்கு மெகா பப்ளிசிட்டியை உருவாக்கி, படத்தை ரசிகர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து விட்டார் தனுஷ்.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions