தனுஷ் புதிய படம் பாடல் பதிவு ஆரம்பம்...!

Bookmark and Share

தனுஷ் புதிய படம் பாடல் பதிவு ஆரம்பம்...!

'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தனுஷ், இயக்குனர் வேல்ராஜ் மீண்டும் இணையும் புதிய படத்தின் பாடல் பதிவு ஆரம்பமாகிவிட்டது. தனுஷின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். 'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து வெளிவந்த 'அனேகன்' படமும் வெற்றி பெற்றுள்ளது.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்திப் படங்களில் நடித்தாலும் தமிழ்ப் பட உலகில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டுமென்பதுதான் தனது லட்சியம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனுஷ் தெரிவித்திருந்தார்.

முன்பெல்லாம் யுவன்ஷங்கர் ராஜாவின் இனிமையான பாடல்கள் மூலம், பட்டி தொட்டியெங்கும் சென்று சேர்ந்த தனுஷ், தற்போது அனிருத்துடன் மட்டுமே இணைந்து பணிபுரிகிறார். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட அனிருத்தையே சிபாரிசு செய்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு உள்ளது.

அவர் தற்போது நடித்து வரும் 'மாரி' படத்திற்கும் கூட அனிருத்தான் இசையமைக்கிறார். தன்னை இளையராஜாவின் மிகத் தீவிரமான ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்ளும் தனுஷ், யுவன்ஷங்கர் ராஜாவை தன்னுடைய படங்களில் மீண்டும் இசையமைக்க வைக்காமலிருப்பது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions