முழுப்பாடல்களையும் எழுதும் தனுஷ்

Bookmark and Share

முழுப்பாடல்களையும் எழுதும் தனுஷ்

3 படத்தில் அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பின்னணியும் பாடி அந்த பாடலில் தானே நடித்திருந்தார் தனுஷ். அதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதனால் அதையடுத்து, தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் பாடல் எழுதி பின்னணி பாடுவதை தொடர்ந்து வருகிறார் தனுஷ்.

அந்த வகையில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் மொத்த பாடல்களையும் எழுதிய தனுஷ், அப்படத்தில் பாடிய அம்மா அம்மா, வாட் ய கருவாட் ஆகிய பாடல்கள் மெகா ஹிட்டானது.

அதையடுத்து, இப்போது அனேகன் படத்திலும் மரண கானா விஜியுடன் இணைந்து தனுஷ் பாடியுள்ள டங்கா மாரி ஊதாரி பாடலும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதனால் இப்போது தனுஷ் பாடிய பாடல்களின் ஆடியோ ரைட்சுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறதாம்.

அதன்காரணமாக, மாரி படத்தைத் தொடர்ந்து மீண்டும் வேல்ராஜ் இயக்கும் படத்திலும் முழுப்பாடல்களையும் தானே எழுதுகிறாராம் தனுஷ். அதனால் மாரி படத்தின் பாடல் பதிவு முடித்து விட்ட அனிருத், அடுத்து வேல்ராஜ் இயக்கும் படத்திற்கான பாடல் கம்போஸ் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார்.

அதனால் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ். ஓய்வு கிடைக்கும்போது, அந்த டியூன்களை ஏதாவது மரத்தடியில் அமர்ந்து கேட்டபடி பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறாராம்[email protected]@@@@@@@@@@@@@

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions