வட சென்னை மூன்று தோற்றங்களில் தனுஷ்

Bookmark and Share

வட சென்னை  மூன்று தோற்றங்களில் தனுஷ்

அனேகன்  படத்தில் அநேக தோற்றங்களில் நடித்த தனுஷ் அடுத்து வெற்றி மாறன் இயக்க உள்ள  வட சென்னை  படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்க உள்ளாராம்.

தனுஷ் தற்போது நடித்து வரும்  விஐபி 2  படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தையடுத்து அவர்  வட சென்னை  படத்தில்தான் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கப் போகும் படம்தான்  வட சென்னை .

வெற்றிமாறன், தனுஷ் கடைசியாக இணைந்த  ஆடுகளம்  படம் வெளிவந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் சிம்புவை வைத்துத்தான்  வட சென்னை  படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால், அது கைவிடப்பட்டது. படத்தை இயக்கவில்லை என்றாலும் சில படங்களுக்கு கதை எழுதியும்,  காக்கா முட்டை  போன்ற படங்களைத் தயாரித்தும் வந்தார்.

திரையுலகில் அறிமுகமான இந்த 8 வருடங்களில் இதுவரை  பொல்லாதவன், ஆடுகளம்  ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.  இதற்கிடையில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள  விசாரணை  என்ற ஒரு சிறிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் மொத்தமே ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் என்பதால் இது வழக்கமான திரைப்படங்களின் எண்ணிக்கையில் சேருவதற்கு வாய்ப்பில்லை.

இந்தப் படத்தின் டிரைலரே மிரட்டலாக இருந்து பல பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவார்களா அல்லது விருதுகளுக்காக படம் மட்டுமா என்பது பற்றி எந்தவிதமான தெளிவான அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.  

மீண்டும் வெற்றிமாறனுடன் இணைவதால் தனுஷ்  வட சென்னை  படத்தில் அதிக ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நடிக்கப் போவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions