முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்?

Bookmark and Share

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ்?

கோலிவுட்டில் தற்போதைய பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுவதால், அடுத்தடுத்து தனுஷுக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

இவர் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் விஐபி-2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர், பிரபு சாலமன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

நடிகர்-தயாரிப்பாள்-பாடகர் என தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் தனுஷ், பிரபு சாலமன் படத்திற்கு பிறகு துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். 

துரை.செந்தில்குமார் ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ ஆகிய படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய ‘எதிர்நீச்சல்’ படத்தை தனுஷ்தான் தயாரித்திருந்தார்.

தற்போது தனுஷ்-துரை.செந்தில்குமார் இணையும் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

அதாவது, கதைப்படி தனுஷ் இப்படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதர்களாக வருகிறாராம். அவருடைய ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions