தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் தனுஷ்!

Bookmark and Share

தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ மற்றும் ‘கொடி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தற்போது இவர் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும், ‘வட சென்னை’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிகாரிகா நடிப்பில் ‘ஒக்க மனசு’ என்ற படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் கதைக்கரு குறித்து கேள்விப்பட்ட தனுஷ், படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது படத்தின் கதையைக் கேட்டு தெரிந்து கொண்டு, அவர்களிடம் ரீமேக் செய்து நடிப்பது குறித்து பேசியிருக்கிறாராம்.

அனேகமாக ‘ஒக்க மனசு’ படம் தமிழில் ரீமேக் செய்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதில் தனுஷ் நடிக்கிறாரா? இல்லையா? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் தெரியும்.

தனுஷ் இதற்கு முன் ‘உத்தம புத்திரன்’, ‘குட்டி’ என்ற இரண்டு ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார்.


Post your comment





Related News
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வெற்றிமாறன் படத்தில் அசுரனாக மாறிய தனுஷ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions